சோலார் சிக்னல் லைட்டுகள் பொருத்தும் பணி ஓசூர் எம்எல்ஏ,மேயர் பங்கேற்று துவக்கம்

 சோலார் சிக்னல் லைட்டுகள் பொருத்தும் பணி ஓசூர் எம்எல்ஏ,மேயர் பங்கேற்று துவக்கம் 

ஓசூர்.நவ.21 - ஓசூர் அருகே பேளகொண்டப்பள்ளியிலுள்ள பிருந்தாவனா பள்ளி சார்பில் 25 இடங்களில் 

ரூ.6 லட்சம் செலவில் சோலார் டிராபிக் லைட்டுகள்  பேளகொண்டப்பள்ளி மற்றும் ஓசூர் மாநகராட்சி 

பகுதியில் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக பேளகொண்டப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் 6 இடங்களில் சோலார் டிராபிக் சிக்னல் லைட்டுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்,மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பங்கேற்று  பணிகளை துவங்கி வைத்தனர்.இதை தொடர்ந்து பள்ளியில் நடந்த விழாவில்,மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை எம்எல்ஏ பிரகாஷ்,மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் வழங்கினர்.மேலும் 

இந்த விழாவில் தளி யூனியன் சேர்மன் சீனிவாசரெட்டி,பள்ளி தாளாளர் சேகர்,பூனப்பள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாதப்பாமுன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சந்திரப்பா,சீனப்பா மற்றும் பள்ளி மாணவ,மாணவியர்கள்,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan