தென் மண்டல அளவிலான மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள்

தென் மண்டல அளவிலான மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள்


 தென் மண்டல அளவிலான மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள் : தமிழ்நாடு. ஆந்திரா, அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மாநில அணி வீராங்கனைகள் பங்கேற்பு

ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் எம்எம்எஸ் தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே தென் மண்டல அளவிலான மகளிர் கால்பந்து போட்டிகள் இன்று துவங்கியது. இந்த போட்டிகளை தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான டி.இராமச்சந்திரன் கால் பந்தை உதைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அவர் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளுக்கு கை குலுக்கி  வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இன்று நாளை (28 - 29 - 2022 ) என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தென் மண்டல அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த 24 அணிகளின் கால் பந்தாட்ட வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய கால்பந்து வீராங்கனைகள் மைதானத்தில் உற்சாகமாக விளையாடினர். நாளை மதியம் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

இந்த கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமான கலந்து கொண்டு போட்டிகளை கண்டு ரசித்தனர.