ஓசூர் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

 ஓசூர் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 

ஓசூர்,நவ.11 - ஓசூரில் ரயில்வே ஸ்டேஷன் சாலையிலுள்ள  மீரா மஹாலில் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.இந்த கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.மாநகர துணை செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சாந்தி,துணைமேயர் ஆனந்தய்யா, மண்டலத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி,மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ,ஓசூர் மாநகராட்சி மேயரும்,மாநகர செயலாளருமான சத்யா ஆகியோர்  பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருகன்,மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன்,மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன்,பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ்,ராமு,திம்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ஓசூர் மாநகர திமுக தேர்தலில் வெற்றி பெற்ற பொறுப்பாளர்களுக்கு,அமைச்சர் காந்தி சால்வை மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தார்.

Hosur Reporter. E. V. Palaniyappan