என்ன ஒரு அன்யோன்யம்....?! ராகுல் காந்தியை கலாய்க்கும் இணைய வாசிகள்...!!

 என்ன ஒரு  அன்யோன்யம்....?!  ராகுல்  காந்தியை கலாய்க்கும்  இணைய வாசிகள்...!!

காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று வருகிறார். பாஜகவுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் அவர் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டு உள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அவர் தெலங்கானா மாநிலத்தில் பாத யாத்திரை சென்று வருகிறார்.  ராகுல் காந்தியுடன் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்தனர். அவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகை பூனம் கவுரும் பங்கேற்றார்.

இதில் பூனம் கவுர் கைகளைப் பிடித்தபடி ராகுல் காந்தி நடக்கும் படத்தைப் பகிர்ந்த பாஜகவின் ப்ரீத்தி காந்தி மோசமாக விமர்சித்து இருந்தார்.

 அதாவது ராகுல் காந்தி தனது தாத்தாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதாக மோசமாகக் கூறி இருந்தார். ப்ரீத்தி காந்தியின் இந்த மோசமான விமர்சனத்தை இணையத்தில் பலரும் கடுமையாகச் சாடினர். 

இதற்கிடையே தெலுங்கு நடிகை பூனம் கவுர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ப்ரீத்தி காந்தியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள அவர், 'உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்வது போன்ற கருத்து இது. இப்படி கீழ்தரமாக பேசுபவர்கள் குறித்து பிரதமர் என்ன சொன்னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அப்போது நான் சிலிப்பாகி விழ போனேன். நான் விழாமல் இருக்கவே ராகுல் காந்தி எனது கையை பிடித்தார்' என்று விளக்கம்  அளித்துள்ளார்.

இந்த விளக்கத்திற்கு பலரும் எதிர் விளக்கம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி நடிகை பூனம் கவரின் கைகளை பற்றி உள்ள நிலையை பார்க்கும் போது சிலிப்பாகி கீழே விழுந்தவரை பிடிப்பது போன்ற இருக்கிறது.

 ராகுல் காந்தி அந்த நடிகையின் கையை இறுக பற்றி பிடித்திருப்பது  ஏதோ ஏதோச்சையாக நடந்தது போல் தோன்றவில்லை. நீண்ட நாள் அந்நியோனியமாக பழகிய அழகிய காதலியின் கையை பிடிப்பது போல் உள்ளது என்று கலாய்த்து வருகின்றனர்.

 இதற்கு ராகுல் காந்தி என்ன பதில் சொல்லப் போகிறார்....?!