கஞ்சா விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன் சிறப்பு பேட்டி....!

கஞ்சா விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:  பர்கூர் டி.எஸ்.பி.  மனோகரன் சிறப்பு பேட்டி....!

 கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்குமார் தாகூர், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது .இதன் விளைவாக பர்கூர் உட்கோட்டத்தில் இந்த ஆண்டு 2022 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது 21 வழக்குகள் பதிவு செய்து 21 நபரை கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த பட்டுள்ளனர்.மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது பர்கூர் உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை கண்டுபிடிக்க சிறப்பு தனிப்படை (ஆப்ரேஷன் கருடா) அமைக்கப்பட்டு தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருபவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பர்கூர் உட்கோட்டம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளான தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லைப் பகுதிகளான வனப்பகுதியை கொண்ட வரமலைகுண்டா, ஒப்பதவாடி, குருவிநாயனப்பள்ளி காளி கோயில் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கஞ்சா விற்பனை ஒழிக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமாக பர்கூர் உட்கோட்ட காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகள் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இனிவரும் காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் உட்கோட்ட சரகங்களான பர்கூர், கந்திகுப்பம் ,நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட கிராமங்களில் எவருக்கேனும் கஞ்சா விற்பனை செய்வது அல்லது கடத்துவது பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல்துறையினருக்கு (9498170237) என்ற தொலைபேசி எண்  மூலமாக அல்லது whatsapp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும் என பர்கூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு மனோகரன், டிஎஸ்பி ,அவர்கள்  தெரிவித்தார்.

Krishnagiri Reporter. Moorthy

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்