ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

 ஓசூரில் பெண் விடுதலை போராளி ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் பேரணி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக அரசின் நூலகத் துறை சார்பில் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளியும் சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை முழுமையாக நீக்கியவருமான சுதந்திரப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன் ராய் 250 வது பிறந்தநாள் விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓசூர் சார் ஆட்சியாளர் சரண்யா கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். 

பேரணியில் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் ராஜாராம் மோகன் ராய் போற்றுவோம், பெண் விடுதலைப் போராளியை நினைவு கூறுவோம் உள்ளிட்ட விளக்கங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இந்த பேரணியானத, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று  ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

HOSUR Reporter. E. V. Palaniyappan