தேசிய இரத்ததான தினத்தை முன்னிட்டு ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்த தான முகாம்

 தேசிய இரத்ததான தினத்தை முன்னிட்டு ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்த தான முகாம் 


*தேசிய இரத்ததான தினத்தை முன்னிட்டு ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.*

ஓசூர் : தேசிய இரத்ததான தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் கிளை மற்றும் ஓசூர் பி.எம்.சி டெக் பாலிடெக்னிக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது,

முகாமில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பெ.குமார் தலைமை வகித்தார், செயலாளர் பெ. மலர், அறங்காவலர் பெ. சசிரேகா வாழ்த்துரை வழங்கினார், இயக்குனர் சுதாகரன் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமை கிருஷ்ணகிரி அரசு தலைமை  மருத்துவமணை இரத்த வங்கி மருத்துவர் Dr. வசந்த் குமார் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டனர்,  

முகாமில் கிருஷ்ணகிரி அரசு இரத்த வங்கி மருத்துவர்குழு கல்லூரி மாணவர்களிடம் இருந்து 87 யூணிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம்  கிளை செயளாலர் N.செந்தில்குமார், இளைஞர் செஞ்சிலுவை சங்க  ஒருங்கிணைப்பாளர் முகமது அப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.