ஓசூர் மருத்துவமனைக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் :அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

ஓசூர் மருத்துவமனைக்கு  100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் :அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஓசூர் மருத்துவமனைக்கு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் :அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்..

அதனைதொடர்ந்து மகப்பேறு உதவி வழங்கும் திட்டம், பிறப்பு சான்றிதழ்,சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை 25 பயணாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்

மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சரால் முதல்நபருக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தின் மூலம் இந்த நாள்வரை 88  லட்சத்து 49 ஆயிரத்து 508 பயனாளர்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்..

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது:

தமிழகத்தில் 4308 மருத்துவம்,மருத்துவம் சார்ந்த களப்பாணியாளர்களை MRB மூலம் நிறப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அக்டோபர் மாத இறுதிக்குள் 4308 மருத்துவ களப்பணியாளர்களின் பணியிடங்கள் நிறப்பப்படும் என்றார்.



மேலும் மாவட்டத்தில் ஓசூர் மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையானது தற்பொழுது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்ந்து இப்பகுதியில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள பகுதி என்பதாலும் தமிழக முதலமைச்சர் ஓசூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளார். 

அதேசமயம், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையில் தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்திட 99 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் எனவே படிப்படியாக தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிடும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு,

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியானது, கற்பனையாக பரப்ப படுகிறது, ஒவ்வொரு மருத்துவமனையிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் இதுபோன்று தகவல் தவறானது என தெரிய வந்தது மேலும் அவ்வாறு ஏதாவது தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் வாயிலாக மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருந்து கிடங்கு அமைப்பதற்காக முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். 

அண்மையில் டெல்லியில் எய்ட்ஸ் காண மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின ஆனால் தமிழகத்தில் அதற்கான மருந்து கூட கட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது என்பதுதான் உண்மை. எனவே, தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது போலியானது, கற்பனையாக பரப்பபடுகிறது என்றார்.

B. S. Prakash