தளி சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள்

 தளி சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள்

தளி சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் குறித்த மனுவை தளி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான            டி.ராமச்சந்திரன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்களிடம் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கோரிக்கைகளில் பத்து வகையான கோரிக்கைகளை தேர்வு செய்த இந்திய கம்யூனிஸ்ட் கடசியின் சட்டமன்ற குழு தலைவரும் தளி சட்டமன்ற உறுப்பினருமான டி.ராமசநதிரன் அவர்கள்  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்களிடம் வழங்கினார்.

அதில்    1.தென்பென்னை ஆற்றின் உபரி நீரை தொரப்பள்ளியிலிருந்து (Lift Pumping) மோட்டார் மூலம் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்குபாசன வசதி பெரும் வகையில் காருகாண்டபள்ளி ஏரி, வைரமங்கலம் குந்துமாரப்பள்ளி ஏரி ஏரி,கொத்தமல்லி ஏரி,கெலமங்கலம் ஏரிகளுக்கு நீர் நிரம்ப கோருதல்

2. கெலமங்கலம் பட்டாளம்மன் ஏரியை தூர்வாரி  தடுப்பு சுவர் அமைத்து படகு சவாரி அமைத்து தரவும் மேலும் நஞ்சப்பன் ஏரியில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் அமைத்தல்

        3.மஞ்சுகொண்ட பள்ளி ஊராட்சி பேல்பட்டி முதல் பிளிக்கள் வரை தார் சாலை அமைத்தல்

4.பெட்டமுகிலாளம் ஊராட்சி மேலூர் முதல் தொழுவ பெட்ட வரை தார் சாலை அமைத்தல்

5.பெட்டமுகிலாளம் ஊராட்சி மேலூர் முதல் குள்ளட்டி வரை தார் சாலை அமைத்தல்

6.ஆச்சிபாலம் ஊராட்சி பேளாலம் முதல்                     காடுகேம்பத்பள்ளி வரை (வழி)          குருசாத்தப்பன் தொட்டி வழியாக தார் சாலை அமைத்தல்

7. ஜவளகிரி ஊராட்சி ஜவளகிரியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அந்தேவனப்பள்ளி ஊராட்சி                அந்தேவனப் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல்

8. தொட்டமஞ்சு ஊராட்சி வடகரை மலை கிராமத்திற்கு தேன்கனிக்கோட்டை யிலிருந்து புதியதாக சிற்றுந்து  (mini Bus)இயக்க கோருதல்

9.. தளி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து அஞ்செட்டியை மையமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைத்துத் தரகோருதல்

10. ரத்தினகிரி ஊராட்சி தட்டசந்திரம் வரையில் வெள்ளேரி பள்ளம் குறுக்கே சிறிய அணை கட்டித்தர கோருதல்

ஆகிய 10 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

B. S. Prakash. Thally Reporter