ஒசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை...!

 ஒசூர்  நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை...!

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகரமைப்பு குழு கூட்டத்தில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைப்பெற்றது

இந்த கூட்டத்திற்கு நகரமைப்பு குழு தலைவர் அசோகா தலைமை வகித்தார்.  கூட்டத்தில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர ஆணையாளர் பாலசுப்பிரமணியன்  நகரமைப்பு குழு உறுப்பினர்கள் நாராயணன் குபேரன் என்கிற சங்கர், புஷ்பா, மம்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நகரமைப்பு குழு சார்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களாக, பாகலூர் சாலை போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு அதனை கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்துடன் இணைப்பது, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மாநகர பூங்காங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும், 

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஏரிகளை சுத்தம் செய்து அதில் சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் கம்பெனிகளில் இருந்து சி எஸ் ஆர் ஃபண்டு பெற முயற்சித்தல் உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும், ஓசூர் நகரின் மையப்பகுதியில் மகாத்மா காந்தி சாலையில் நெருக்கடியான இடத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை ஓசூருக்கு வெளியே அமைக்க வேண்டும் போன்ற 5 தீர்மானங்கள் நகரமைப்பு குழு சார்பில் மாநகராட்சி மேயர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றுவதாக மாநகர மேயர் சத்யா அவர்கள் அறிவிப்பு செய்தார். மேலும் ஓசூர் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆனந்த பவன் ஹோட்டலில் இருந்து பாகலூர் ரோடு ஜி ஆர் டி ஜங்ஷன் வரை உள்ள சர்வீஸ் சாலை புதிய சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Hosur Reporter. E.V. Palaniyappan