காங்கிரஸ்கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக்கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

 காங்கிரஸ்கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக்கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ்கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக்கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!

ராமநாதபுரம் மாவட்டம், இந்திய தேசியகாங்கிரஸ் கட்சி சார்பில் மோடி அரசின் கடுமையான விலைவாசி உயர்வைக் கண்டித்து ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் முன்பாக மாவட்ட தலைவர் சின்னதுரை அப்துல்லா தலைமையில் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ மலேசிய பாண்டியன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்வு ஏற்பட்டதன் காரணமாக இந்திய மக்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.என்பதை மத்திய அரசைஉணர வைக்க இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் ராமநாதபுரம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து  தலைமை தபால்நிலையம்முன்பாக கூடி மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டார்கள்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மாவீரன் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகர்மன்ற கவுன்சிலர்கள் வாலியா ராஜாராம் பாண்டியன், லயன் SKG.மணிகண்டன், வட்டாரத் தலைவர்கள்  திருப்புல்லாணி சேது பாண்டி,ராமநாதபுரம் கோபால், புவனேஷ் குமார்,ராமர் மற்றும் ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, முன்னாள் மாவட்ட தலைவர்கீழக்கரை நகர்தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மற்றும் பேச்சாளர்.இபுறாகிம்,

மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மொத்தம் 60 பேர் கைதானார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்