ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் வருகை.

 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் வருகை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 புள்ளி 11 கோடியில் 20 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று புறநானியில் கட்டிடங்கள் சோழந்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டப்பட்டுள்ள மூன்று செவிலியர் குடியிருப்புகள் ரெகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு என மொத்த 28 புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று காலை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் முன்பு திறந்து வைத்தார்இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பார்த்திபனூரில் ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளி ஆய்வு செய்தார் இதனை அடுத்து பார்த்திபனூர் கட்டப்பட்டுள்ள மேல பெருங்கரை துணை சுகாதார நிலையத்தை நேரில் சென்று திறந்து வைத்தார் இதன் பின் ராமநாதபுர அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் முன்பு மற்ற 27 புதிய கட்டிடங்கள் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார் ராமநாதபுர அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் ராய் சீன்ஸ் 21 தமிழ் மன்ற தொகுப்பு விழா மற்றும் மாணவர் பேரவை பதவியேற்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடா மர்கீஸ் பாராளுமன்ற.. உறுப்பினர் கே நவாஸ் கனிராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணிஊராட்சி ஒன்றிய தலைவர்புல்லாணி,ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர் கே கார்மேகம் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர் கான், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், 

மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த நிர்வாகிகள்,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேல்ச்சாமி, காஞ்சி ரங்குடி ஊராட்சி தலைவர் கோடாங்கி முனியசாமி, (ம) தி.முக நிர்வாகிகள்உள்ளிட்ட   அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் மலர்வண்ணன் நன்றியுரை கூற நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதேநிறைவுபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி