மதவெறி பிடித்த ஆசிரியை...! பணிநீக்கம் செய்ய பெற்றோர்கள் கோரிக்கை...!!

மதவெறி பிடித்த ஆசிரியை...! பணிநீக்கம் செய்ய பெற்றோர்கள் கோரிக்கை...!!


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பேடர அள்ளி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்  75வது சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற மறுத்தார். இந்த செயலை கண்டித்து ஊர் பொதுமக்கள் சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி  புகார் மனு ஒன்றை வழங்கினர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது, “கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ மனைவியர் கல்வி பயில்கிறார்கள். இதில்   75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அந்த பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வி  என்பவர் தேசிய கொடி ஏற்ற மறுத்துவிட்டார். 

இதனை ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு நான் உலகளாவிய ‘யெகோவாவின் சாட்சி’ என்ற அமைப்பில் இருப்பதால் எங்கள் சட்டப்படி வணக்கம் என்பது கடவுளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுடைய சட்டம். பைபிளின் சட்டம்.. நான் கடவுளின் சட்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றேன். வணக்கம் கடவுளை மட்டுமே சேர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

ஆனால் தேசியக்கொடியை நான் மதிக்கின்றேன், மரியாதை கொடுக்கின்றேன், ஆனால் நான் அதை அவமதிக்கவில்லை, இது என்னுடைய நிலைப்பாடு, அரசினுடைய அனைத்து சட்டத்திற்கும் நான் கீழ்படிந்து நடப்பேன். ஆனால் வணக்கம் சொல்லுவது மட்டும் கடவுளுக்கு மட்டும்தான் தெரிவிப்பேன் மற்றபடி அனைத்து சட்டங்களையும் கீழ்ப்படிந்து நடந்து கொள்வோம், எனவும் தேசிய கொடியை வணங்கமாட்டேன், என்று கூறிவிட்டார். 

எனவே இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே  அவமதிப்பு செயலை செய்த தலைமையாசிரியர் மீது தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்திடவும், ஊர் பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பைத்தியக்கார ஆசிரியர்கள் மட்டுமல்ல நிறையப்பேர் மத வெறி பிடித்து அலைகின்றனர்.  மத போதகர்கள் இவர்களை இந்த அளவிற்கு மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.  இதுபோன்று மதவெறி பிடித்தவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்கள் கிறிஸ்துவ மதத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் மதவாதிகளின் சுயநலம்தான். அவர்கள் ஏகபோகமாக வாழ்வதற்கு இவர்களே பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகிறார்கள்.  இதற்கு இங்கு இருக்கின்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் போலி மத வாதம் பேசுபவர்கள்  துணை போவதால் அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதச்சார்பின்மை, மதவெறி பற்றி பேசுகின்ற மு. க. ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்டுகள், திராவிட பெரியார்கள் மதவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறது என்பதை இந்த ஆசிரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

 பொதுமக்களே நீங்களாவது எச்சரிக்கையாக இருங்கள்.....