வேகத்தடை வேண்டும்.....?

 வேகத்தடை வேண்டும்.....?

தமிழக அரசே! மாநில நெடுஞ்சாலை துறையே! உளுந்தூர்பேட்டை இருந்து பெரியசெவலை செல்லும் வழியில் பாண்டூர் கிராமம் அருகே உள்ள அரளி பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கனவே வேகதடை இருந்தது.தற்போது சாலைகள் அகலபடுத்தும்போது அந்த வேகத்தடையை அகற்றிவிட்டார்கள்.

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அங்கே நின்றுதான் பேருந்தில் ஏற வேண்டும். பொதுமக்களும் சாலைகளை கடந்துதான் செல்லவேண்டும். ஆனால் இருசக்கர வாகனத்தில் வருபவரும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவரும் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. சம்பந்தமே இல்லாத இடத்தில் வேகத்தடை அமைத்து உள்ளார்கள். ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் நூற்றிற்குமேல் விபத்து நடக்கிறது.ஏற்கனவே இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது . மனு கொடுத்து மாதக்கணக்கில் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தங்கள் மேலான கவணத்திற் கொண்டு மிக விரைவில் அரளி பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டுமென பாண்டூர் மற்றும் அரளி கிராம பொதுமக்கள் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்ககொள்கிறேன்...

Kalkakkurichi Reporter. G. Murugan