செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சட்டமன்ற உறுப்பினர்,மேயர் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சட்டமன்ற உறுப்பினர்,மேயர் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்பு


ஒசூர் வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு சட்டமன்ற உறுப்பினர்,மேயர் மற்றும் பள்ளி மாணவர்கள் வரவேற்பு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்  மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ளநிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் வழியாக வலம்வந்த  ஒலிம்பியாட் ஜோதி நேற்று தமிழகம் வந்தடைந்தது

இன்று, கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் மாநகராட்சி மகரிஷி தனியார் பள்ளிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தநிலையில் ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ்,ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பளித்தனர்..

பின்னர் பள்ளியின் தடகள போட்டிகளில் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீராங்கணை ஜோதிகா, குதிரை மீது அமர்ந்து ஒலிம்பியாட் ஜோதியினை மாணவர்கள் காணும் வகையில் மைதானத்தில் வலம் வந்தார்.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைகளை தட்டி வரவேற்றனர்

அதனை தொடர்ந்து 44வது செஸ்  ஒலிம்பியாட் போட்டிகளை குறிக்கும் வகையில் பள்ளி மைதானத்தில் 44மரக்கன்றுகள் நடப்பட்டன..

Hosur Reporter. E.V. Palaniyappan