பாலித்தீன் பையை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!!!

 பாலித்தீன் பையை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!!!


தடையை மீறி பாலித்தீன்பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்   வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிபாலிதீன் பொருட்களின் பயன்பாட்டிற்கு 1.7.22  முதல் தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.


 மக்காததன்மை கொண்ட நெகிழி பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துக்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.இதை சரி செய்ய வேண்டிய அவசர நிலையில் நாம் உள்ளோம். நெகிழி பொருட்களினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பொதுமக்களிடம் இருந்து நெகிழியினை கிலோ ரூ 8க்குவாங்கும் நெகிழி மீளவாங்கும் கொள்கையினை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமல் படுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்கள் அல்லது கடைகள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு உரிய அபராதம் ஊராட்சி நிர்வாகத்தால் விதிக்கப்படும். மீண்டும் மஞ்சப்பைக் கொள்கையை ஏற்று நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக துணி, காகிதம்,சணல், பைகள்,பாக்குமர இலை, அலுமினியத்தாள், மற்றும் கண்ணாடி குவளைகளை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி