சொந்த செலவில் சூனியம் வைப்பதா...? போக்குவரத்து துறைக்கு தனியார் பள்ளிகள் கண்டனம்.....

 சொந்த செலவில் சூனியம் வைப்பதா...?  போக்குவரத்து துறைக்கு தனியார் பள்ளிகள் கண்டனம்.....

 தமிழ்நாடு முழுக்க தனியார் பள்ளி வாகனங்களை மட்டும் இது நம்ம சென்னை நம்ம செஸ் என்று பெரிய விளம்பர ஸ்டிக்கர் தமிழக அரசின் சார்பில் நமது செலவில் ஸ்டிக்கர் ஓட்டச் சொல்லி ஆர்டிஓக்கள்  மூலம்  வற்புறுத்துகிறார்கள் ...மிரட்டி ஒட்ட வைக்கிறார்கள். சொந்த செலவில் சூனியம் வைக்கிறார்கள்.

 மேலும் சென்ற வாரம் கரூரிலும் அடுத்த வாரம் கோவையிலும் தமிழக முதல்வர் மாவட்டந்தோறும் வருகிறார்கள் அதற்காக அனைத்து தனியார்  பள்ளிகளிலும் உள்ள பள்ளி வாகனங்களையும் ஆர்டிஓக்களிடம்  இரண்டு நாட்களுக்கு முன்னாடியே ஒப்படைக்க வேண்டும்...

நமது சொந்த செலவில் டீசல் போட்டு வாகனங்களை அவர்கள் சொல்கிற இடத்திலிருந்து இயக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்...

 பள்ளி வேலை நாளில் எப்படி பள்ளி வாகனங்களை அனுப்ப முடியும். பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது அதைப்பற்றி எல்லாம் ஆர்டிஓக்கள் கவலைப்படாமல் நம்மிடம் மிரட்டி  வண்டிகளை பிடுங்குவதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்

 தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வண்டிகளை பிடுங்கும் வேலையை உடனடியாக நிறுத்த வேண்டும்...

 ஆர்டிஓக்களின் அடாவடி  நடவடிக்கைகளை கண்டித்து சென்னை சேப்பாக்கம் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11.07.2022 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு  நடத்துவது என்று  முடிவெடுத்து இருக்கிறோம்.. என்பதை இதன் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து ஆணையாளர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்..

 நாளும் தனியார் பள்ளியின் நிர்வாகிகளிடம் பல்லாயிரக்கணக்கில் லஞ்சமாக பணம் பிடுங்கும்  லஞ்ச லாவண்யாத்தில் மிதக்கும் ஆர்டிஓக்களின்அடாவடி நடாவடிக்கைகளுக்கு முடிவு கட்டுங்கள்...

 பள்ளி நிர்வாகிகளை அனைவரும் ஆர்ப்பரித்து வாருங்கள் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.