தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு 

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு 

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்கள் பள்ளி வளாகத்தை சூறையாடி பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டனர் இந்த சம்பவம் பெரும் அதிர்வு அளவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளி சூறையாடப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் இன்று தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பள்ளி ஆசிரியர்கள் உரிமையாளர்கள் பாதுகாத்துக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் பெற்றோர்கள் என்கிற போர்வையில் சமூக விரோதிகள் கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சூறையாடியும் மாணவர்களை பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாத சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் இருக்கிறது எனவே அரசு எங்களுக்கும் எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் சொத்துக்களுக்கும் பள்ளி வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த மனு அளிப்பு போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி தாளாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து கொண்டு பங்கேற்றனர்.

Krishnagiri Reporter. K. Moorthy