தமிழகத்தில் அதிமுகவின் தொடர் போராட்டங்கள் மீண்டும் இ.பி.எஸ். முதல்வராகும் வரை தொடரும் - ஒசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி பேச்சு...

 தமிழகத்தில் அதிமுகவின் தொடர் போராட்டங்கள் மீண்டும் இ.பி.எஸ். முதல்வராகும் வரை தொடரும் - ஒசூரில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி பேச்சு....


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு பகுதி இராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் வீட்டுவரி உயர்வு முதல் மின்கட்டண விலை உயர்வு வரை தமிழக அரசு உயர்த்திய வரி,கட்டணங்களை குறைக்க வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள்  தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் புருஷோத்தம ரெட்டி அவர்கள் வரவேற்று பேசினார்.

வேப்பனஹள்ளி  சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உறையாற்றினார்.. அப்போது அவர் பேசுகையில்:

திமுக, ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 15 மாதங்களில் மக்களுக்கான துயரங்கள் அதிகரித்துள்ளது.

15 மாத ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு ஒரு உதாரணம் தான் கள்ளக்குறிச்சி கலவர சம்பவம்..

ஒரு போராட்டத்தில் அவர்களுக்கான நியாயம் கேட்டுத்தான் போராட்டம் நடக்கும் அங்கு, சமூக விரோதிள்,தீவிரவாத கும்பல் நுழைந்திருந்தது.

தமிழக வரலாற்றிலேயே ஐஜி,டிஎஸ்பி முதல் காவலர்கள் வரை 80 பேர் சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு காயமடைந்திருக்கிறார்கள் என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான   தமிழக அரசிற்கு  காவல்துறைக்கும் ஏற்ப்பட்ட கலங்கம் .

தமிழகத்தில் கஞ்சா,கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது அவற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் எந்தவித வரி உயர்வையும் அம்மா அவர்களாலும் இபிஎஸ் அவர்களாலும் உயர்த்தப்படவில்லை மின்சார உற்ப்பதி செய்யப்பட்டு உதிரியாக மீதம் எடுக்கப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் மின்வெட்டு தொடர்கிறது, மின் கட்டணம் 50%வரை உயர்த்தப்பட்டிருக்கிறது, ஒரு ஏழை குடும்பம் இதன்மூலம் 80 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தவேண்டி உள்ளது.

கிரிமினலாக ஒரு குடும்பத்தில் இரண்டு மின் இணைப்புகள் என்றால் ஒரே மின் இனைப்பாக கருதி 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசம் என்கிறார் இரண்டு இனைப்புகளும் ஒன்று என்றானால் 100 யூனிட்கள் இலவசம் மட்டுமே போக மற்றொரு இனைப்புக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் வாடகை வீடுகள், கடைகள் வைத்திருந்தவர்கள் வருமானமின்றி  காலிசெய்யும் சூழலில் நகர்ப்புறங்களில் வீட்டுவரி 2 மடங்கு உயர்வு என்பது மக்களை பெரிதும் பாதிக்கிறது..

வீட்டுவரி உயர்வு முதல், மின்கட்டண உயர்வு வரை தமிழக அரசிற்கு எதிரான முதல் போராட்டம் இது, தொடர்ந்து இனி தமிழகத்தில் போராட்டங்கள் 2026ல் மீண்டும் இபிஎஸ் முதல்வராகும் வரை நடைப்பெறும் என்றார்..

அதனை தொடர்ந்து தமிழக அரசு மற்றும் மின்வாரியத்துறையை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன..

மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்,மாவட்ட துணை செயலாளர் மதன், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக ஒசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜா என்கிற ராஜீ நன்றி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5000 த்திற்கும் அதிகமான அதிமுகவினர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் பெருமாள், ஓசூர் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மாநகர செயலாளருமான நாராயணன், பகுதி கழக செயலாளர்கள் அசோகரெட்டி, மஞ்சுநாத், வாசுதேவன், ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிக்குமார்,ஹரிஷ் ரெட்டி,ராஜேந்திரன்,ஜெயபால் கிருஷ்ணன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் மதன் அலமேலு, இளைஞன் மற்றும் இளம்பெண்கள்  பாசறை மாவட்ட செயலாளர் ராமு, அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளரும் மாமன்ற மண்டலக்குழு தலைவருமான ஜே பி என்கின்ற ஜெயப்பிரகாஷ், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன் ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன்,எம் ஜி ஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கட் சாமி, துணை தலைவர் நாராயணசாமி, மாமன்ற கல்வி குழு தலைவர் ஸ்ரீதர்,நாராயண ரெட்டி , மாமன்ற உறுப்பினர்கள் கும்மி என்கின்ற ஹேம குமார், குபேரன் என்கின்ற சங்கர் நந்தகுமார், சாச்சுபாய், மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபுர் ரகுமான், ஓசூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் முருகேஷ், பகுதி மாவட்ட பிரதிநிதி லட்சுமணன், வட்ட செயலாளர் சீனிவாசன், பாலுசாமி மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan