மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஆட்சியரிடம் மனு!!!

 மின் கட்டண உயர்வை ரத்து செய்ய ராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஆட்சியரிடம் மனு!!!


ராமநாதபுரம் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீட்டு வரி உயர்வு மின் கட்டண உயர்வை திமுக அரசு திரும்ப பெற வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்  ஜானி டாம் வர்கீஸிடம் மனு அளித்தனர். மூன்றாண்டு காலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறுக சிறுக உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பலதரப்பட்ட வரிகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது இவைகளை திரும்ப பெற வேண்டும்,ரத்து செய்ய வேண்டும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் சொத்து வரியை தமிழக அரசு ஊயர்த்தியது அதற்குள் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளதை மக்களை மிகவும் பாதிக்கும் எனவே கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. என்பதை

வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் (கிழக்கு) நாகேஸ்வரன் தலைமையில் மாவட்ட தலைவர் தர்மராஜ், ராமநாதபுரம் நகர்தலைவர் பாபா சங்கர்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜ்குமார், திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் சதீஷ்குமார், மண்டபம் கிழக்கு வட்டார தலைவர் சுரேஷ்குமார், உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி,N.A. ஜெரினா பானு