உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்:தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம்,

உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்:தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம்,


கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து 12.07.2022 அன்று இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள்    நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.  பலர் பள்ளிப் பொருட்களை எடுத்து சென்றனர். கல்வீச்சு தாக்குதலில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார், டிஐஜி பாண்டியன் உள்பட போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை அடித்து நொறுக்கினர் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இச் சம்பவம் குறித்து காவல்துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்திஸ்ரீமதியின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் எனவும்,என்றென்றைக்கும் வன்முறை தீர்வாகாது போராட்டக்காரர்கள் அமைதி காத்து மாணவிக்கு நடந்த அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர அகிம்சை வழியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் போராட்டத்தை அல்லது கருத்துக்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும்

 தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இருக்கிறது பாரபட்சம் இன்றி விசாரணை நடத்தி தயவு தாட்சனையம் இன்றி தண்டனைகளை வழங்குமாறும், அதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் எந்த இடத்திலும் நடக்காத வண்ணம் தீர்ப்பு இருக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின்  சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

பழனி.சதீஷ், நிறுவனர் தலைவர், தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம்.

Kumarakurubaran. Chief Reporter