பெருந்தலைவர் காமராஜ் 120 வது பிறந்த தின விழா!!

 பெருந்தலைவர் காமராஜ் 120 வது பிறந்த தின விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பெருந்தலைவர் காமராஜ் அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜ் 120 வது பிறந்த தின விழா!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் பெருந்தலைவர் காமராஜ் அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 120வது பிறந்த நாள் தின விழா பெருந்தலைவர் காமராஜ் அறக்கட்டளை தலைவர் வி.பி.எம் கே.கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கே. பெரிய கருப்பன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை ஆசிரியர் செபஸ்டியான் தொகுத்து வழங்கினார். ராமநாதபுரம் வி.பி .எம்.கே. ஜுவல்லர்ஸ் உமாராணி கருணாமூர்த்தி, லட்சுமி தங்கம் காம்பவுண்ட் செளந்தரி மோகன்,அன்னை சிவகாமி நாடார் மகளிர் சங்கம் தலைவி எஸ். ராஜேஸ்வரி. சந்திரசேகர், கிங் மம்மி பேக்கரி உரிமையாளர் மனோன்மணி, மனோகரன்,நியூ மம்மி பேக்கரி உரிமையாளர் சுமதி சேகர்,மதுரை நாடார் மகாஜன சங்க ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி EC. மெம்பர் தேன்மொழி மதுரை ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 

பெருந்தலைவர் காமராஜ் திருஉருவப்படத்தை திறந்து வைத்து வாழ்த்துரை நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல் ராஜ் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்தையும் திருப்பணிச் செம்மலுமான S.இராமசாமி அவர்களின் திரு உருவ படத்தைதிறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஜீ தமிழ், டிவி ராஜ் டிவி பட்டிமன்ற புகழ் சேனல் அவனி மாடசாமி சிறப்புரையாற்றினார்.இயல்பு நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பட்டப்படிப்பு சிறப்பாக படிக்கும் நான்கு மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அரசடி வண்டல் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் பொருட்களும் உயர்நிலைப் பள்ளிக்கு மின்விசிறிகளும் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் வழங்கினார்.10, 12ஆம் வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துரையை நாடார் மகா சங்க மதுரை இணைச் செயலாளர் டி. மோகன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பெருந்தலைவர் காமராஜ் அறக்கட்டளை துணைச் செயலாளர் கே.குகன் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

ராமநாதபுரம் நிருபர் M.N.அன்வர் அலி,N.A ஜெரினா பானு