பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் நெகிழி பயன்பாட்டிலிருந்து விடுதலை,

 பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் நெகிழி பயன்பாட்டிலிருந்து விடுதலை,

தேனிமாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் நெகிழி பயன்பாட்டிலிருந்து விடுதலை,நமது நகரம் தூய்மையான நகரம், பசுமையான நகரம் என்ற வாசகங்களோடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தென்கரை பேரூராட்சி தலைவர் வே.நாகராஜ், துணை தலைவர்ராதா ராஜேஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2 வது வார்டு கவுன்சிலர் மு.தேவராஜ் மற்றும் கவுன்சிலர்கள் குமரேசன், முத்துகாமாட்சி, மகேஸ்வரி, அழகுத்தாய், அனிதா, பூசாரி கருப்பணன், சாந்தி, சிட்டம்மாள்,கைலாசம், இலட்சுமணன்,கோமதி மற்றும் துப்புரவு பணியாளர்கள், சுய உதவி  குழுக்களை சேர்ந்த பெண்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.      

தேனி மாவட்ட செய்திக்காக வெள்ளைச்சாமி