கிருஷ்ணகிரியில் கிரைய ஆவணத்தில் மோசடி

 கிருஷ்ணகிரியில் கிரைய ஆவணத்தில் மோசடி

கிருஷ்ணகிரி பெரியார் நகர் 2-வது தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ரூபாய் 2 லட்சம் தேவை  என கூறி தான பட்டி கிராமத்தை சார்ந்த ஆர். மாணிக்கம் என்பவரிடம் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆவணத்தை கொடுத்து 29. 12. 2014 ஆம் தேதி ரூபாய் 100க்கு மாதம் ஒன்றுக்கு 2 ரூபாய் வட்டி விகிதத்தில் ரூபாய் 2 லட்சத்தை கடனாகப் பெற்றுக் கொண்டார்.

நில அடமானத்தில் பெயரில் பணத்தை பெற்றுக்கொண்ட பிரபாகரன் 11 மாதத்தில் அசலையும் வட்டியையும் திருப்பித் தருகிறேன் என்று 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுத்து இதுவரை அசல் மற்றும் வட்டி திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார். கேட்கும் போதெல்லாம் இன்று தருகிறேன் நாளை தருகிறேன் என்று சொல்லி சொல்லியே இதுவரை ஏழு வருடங்கள் கழிந்து விட்டது.

இந்நிலையில் மாணிக்கத்திடம் அடமானம் வைத்த நிலத்தை 01. 04. 2015 அன்று துரைசாமி மனைவி தங்கம்மாள் என்பவருக்கு அசல் ஆவணம் இல்லாமல்  பர்கூர் சார்பதிவாளர் ஆக இருந்த ராஜேந்திரன் என்பவர் ஆவண எழுத்தர் சரஸ்வதி பிரபாகரன் அவர்கள் எழுதிக்கொடுத்த பத்திரத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார். கிரைய ஆவண எண்1185/2015  மேற்கண்ட கிரைய ஆவணத்தின் அசல் உன்னிடம் ஒப்படைத்து உள்ளேன் என்று கூறி பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிலத்தில் அசல் ஆவணம் என்னிடம் உள்ள போது  அது இல்லாமலே அசல் ஆவணங்களை ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொய்யாக சொல்லி பத்திரப்பதிவில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.

எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரத்தின் பேரில் பணம் கொடுத்து ஏமாந்த ஆர். மாணிக்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி




Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்