RTE வேண்டாம்.... தனியார் பள்ளிகள் கொந்தளிப்பு...,!

 RTE வேண்டாம்.... தனியார் பள்ளிகள்  கொந்தளிப்பு...,!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்ட பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய  அரசு வழங்கி வருகின்றது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 25 ஆம் தேதி முடிவடைந்தது.

மொத்தம் 8,238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 94,256 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதால், அந்த இடங்களுக்கு மே 30 ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் RTE இட ஒதுக்கீட்டில் நிறைய குளறுபடிகள் நடந்து இருப்பதாக தனியார் பள்ளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 75 சதவீதம் அளவிற்கு குறைத்து இருப்பது பெற்றோர்கள் மற்றும்  பள்ளிகளுக்கு இடையே மிகப்பெரிய  பிரச்சினையை உருவாக்கும் நாளை இப்பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

RTE  விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து  செய்துவரும் குழப்பத்தால் இனி RTE எங்களுக்கு வேண்டாம் என்கிற முடிவில் பல பல நிர்வாகிகள்  இருக்கின்றனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் K.R.நந்தகுமார் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்..,

 அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி சட்டம் 2009 இன் படி தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை இதுகாறும் கடைப்பிடித்த நடைமுறைகளை மாற்றி அதிகாரிகள் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தியும் மாணவர்கள் எண்ணிக்கை குறைத்தும் இவ்வளவு மாணவர்கள் தான் சேர்க்க வேண்டும் என்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

 பள்ளிகளே செயல்படாமல்  இருந்த நேரத்தில் கூட அரசு விதிப்படி விண்ணப்பித்து காத்துள்ள பெற்றோர்கள் குழந்தைகள் சென்ற ஆண்டை  காட்டிலும் இந்தாண்டு பள்ளி தொடர்ந்து தொய்வின்றி நடந்து வரும் வேளையில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் RTE அட்மிஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  விண்ணப்பித்து காத்துள்ள வேலையில்  தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தடுக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை குறைத்து அளவீடு செய்து அதிகாரிகள் வெளியிட்டுள்ளது தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை கேட்டால்   அதிகாரிகள் யாரும் பொறுப்போடும் மரியாதையோடும் எந்த தகவலும் சொல்வது கிடையாது. இவ்வளவு தான் சேர்க்க வேண்டும் என்று மாணவர்கள் எண்ணிக்கையை குறைத்து சேர்க்க வலியுறுத்துகிறார்கள்.

ஒரு தெளிவான அறிக்கையோ அரசாணையோ வெளியிடாமல் நாளை காலை நடைபெறும் குலுக்களில் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் சண்டை முட்டும் காரியத்தை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படியும் மாணவர்கள்சேர்க்கையை அனுமதிக்காமல் பள்ளிக்கல்வித்துறை  அதிகாரிகளே(SSA/RMSA) எதேச்சையாக முடிவுசெய்து அறிவித்துள்ளது தனியார்  பள்ளி நிர்வாகிகளுக்கு மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

 இதே போல் எந்தவித முன்  அறிவிப்பும் இல்லாமல் 2020.. 21 ஆம் கல்வி ஆண்டிற்குரிய ஆர்டிஇ கல்வி கட்டண பாக்கியை 25% குறைத்துக் கொடுத்தார்கள் அதுவும்  இன்னும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டண பாக்கி அப்படியே  நிலுவையில் உள்ளது.

2021..22 ஆம் ஆண்டுக்குரிய கல்விக் கட்டண பாக்கி இன்னும் ஒரு பைசா கூட தரவில்லை.

 இப்படித் தொடர்ந்து குழப்பங்கள் செய்வதால் இது  அரசுக்குத்தான் கெட்ட பெயர் உருவாகும்.

 இந்தச் சூழ்நிலையில்  தனியார் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த பொருளாதார சிக்கலுக்கு இடையில் சிக்கித் தவிக்கிற சூழ்நிலையில் உடனடியாக நிலுவையிலுள்ள சென்ற ஆண்டு  கல்வி கட்டண பாக்கியை வழங்கிட வேண்டும்.

 மேலும் இந்த ஆண்டு நாளை(30.05.2022) நடைபெறும் சேர்க்கைக்கான குலுக்கலில் ஏற்கனவே கடைபிடித்து வந்த நடைமுறையையே தவறாமல்  கடைபிடித்து  தமிழகஅரசுக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு எந்தவிதஅவப்பெயரும்  ஏற்படாதவண்ணம் ஏழை மாணவர்கள் 25 % சேர்க்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும்  வழங்கிட வேண்டும்..மாணவர்கள் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகஅறிவுறுத்தி ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகின்றோம்.

 சென்ற ஆண்டைக் காட்டிலும்இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை முடித்து ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கையை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

 தனியார் பள்ளிகள் ஆர்டிஇ அட்மிஷன் செய்வதை தடுப்பதற்காகவே குறைப்பதற்காகவே  சில அதிகாரிகள் திட்டமிட்டு உடனே மாணவர் சேர்க்கையை செய்யவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் எண்ணுவதை கைவிட வலியுறுத்துகிறோம்.என்று மாநில பொதுச்செயலாளர் .. கே ஆர் நந்தகுமார்  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.