ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்!!

 ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்!

 ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மருத்துவமனை (ம) சென்னை A.V.S. கார்டியாக் சென்டர் இணைந்து தெய்வத்திரு N. வேலுச்சாமி வேலு மாணிக்கம் குழுமத்தின் நிறுவனரின் 99வது பிறந்தநாளையொட்டி  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை வி.கே. & கம்பெனி நிறுவனர் வி. கதிரேசன் துவக்கி வைத்தார்கள்.

 இம்முகாமில் இருதய சிறப்பு நிபுணர் டாக்டர். வி.கே சஞ்சீவ், நரம்பியல்சிறப்பு நிபுணர் டாக்டர் .ஏ.ஆர். ஏ சங்கநிதி, பாதம் சிறப்பு நிபுணர் டாக்டர்.வி.கே. ராஜீவ் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். S.A. சுயம்புலிங்கம், மற்றும் பொது மருத்துவர் டாக்டர் .டி. பிரியங்கா ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கினார்கள். இந்த முகாம் ஏற்பாடுகளை பொறியாளர் V.K.பிரதீவ்செய்தார். இதில்  70 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு