கடன் சுமையில் தத்தளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்.....

 கடன் சுமையில் தத்தளிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்.....

ஒரே கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையினை வலியுறுத்தி DPI வளாகத்தில் ஒற்றுமையுடன் போராட்டம் நடத்தினோம் ஆனால் அது குறித்து நமது கல்வித்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை.

விடுமுறை காலத்தில் :

அ) 31.05.2022 க்குள் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கான பணி.

ஆ) Result approval.

இ) 2022 - 2023 க்கான மாணவர் சேர்க்கை.

ஈ) பள்ளி மராமத்து வேலை

உ) இன்னும் பல அவசிய / அவசர பணிகளை முடிக்க வேண்டிய நிலை.

ஊ) இதுவரை வாங்கிய கடன்களுக்கு வட்டியாவது கட்ட வேண்டிய நிலை.

எதை பார்ப்பது !

எப்படி பார்ப்பது!!

யார் பார்ப்பது !!!

மழலையர் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் புதியவர்கள். நிர்வாக பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை.

தாளாளர்கள் *தனிஒருவனாக* நின்று அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.

*தமிழகம் முழுவதும் ஒரேமாதிரியான கல்வி கட்டணமே வேண்டும்*

அல்லது

ஒரு வருட காலத்திற்கு *பழைய கல்வி  கட்டணம்* வசூலிக்க அனுமதிக்க ஒட்டு மொத்த ஆணை பெற வேண்டும்.

அல்லது

மேலும் மூன்று மாத காலம் அவகாசமாவது உடனே பெற வேண்டும்.

பள்ளி தாளாளர்களின் பரிதாபமான நிலையை உணர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி கட்டண நிர்ணய குழுவிற்கு வந்து செல்லக்கூட செலவு செய்ய இயலாது நிலையில் பல பள்ளி தாளாளர்கள் உள்ளனர்.

a) 2019 - 20 பாதி கட்டணம் கூட வசூலாக வில்லை.

b) 2021 - 22 எவ்விதமான கட்டணமும் பெற இயலவில்லை.

c) 2021 - 22 கால்வாசி கட்டணம் கூட  செலுத்த பெற்றோர்களுக்கு  மனமில்லை.

ஆனால் :

அரசுக்கு / வங்கிகளுக்கு  பள்ளிகள் செலுத்தவேண்டியவற்றை எந்தவித மாற்றமும் இல்லாமல் வசூல் செய்து விட்டார்கள்.

தாளாளர்கள் கடன் சுமையில் தள்ளாடுகின்றனர்.

தமிழக அரசு இவர்களின் சுமை ஒன்றை பற்றி கூட  கவலைப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.  பற்றாக்குறைக்கு இவர்கள் அனுதினமும் கொடுக்கின்ற நெருக்கடி தனியார் பள்ளி நிர்வாகிகளை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.  இதனால் பல பள்ளி நிர்வாகிகள் தங்களின் சொத்துக்களை விற்றும் அடமானம் வைத்தும் தன்மானத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருக் கிறார்கள்.  தமிழக அரசு பிடித்தம் செய்து  வைத்துள்ள  RTE கல்வி கட்டண பாக்கி  25 சதவீதத்தை ஆவது  திருப்பி கொடுத்த நலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.  தமிழக அரசு  செவிசாய்க்குமா...?