பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்....

 பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்....

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் N.M. மயில்வாகனன்  உத்தரவின் பேரில் புகார் பெறப்பட்டவுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகளை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையை விரைந்து நடத்தியதில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு பாலியல் குற்ற வழக்குகளில் ஐந்து எதிரிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவி என்ற ரவீந்திரன் என்பவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ள வரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.கார்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வி எதிரி ரவி என்ற ரவீந்திரனை 13.5 20 22 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைத்தார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 14 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேலும் மூக்கையூர் கடற்கரை பகுதியில் கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செயல்பட்டும் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தினேஷ்குமார் த/பெ  சுப்பையா, நந்த குளம், திருச்சுழி தாலுகா, விருதுநகர் மாவட்டம். 2 அஜித் குமார் த/ பெ தர்மலிங்கம், கிழக்குத்தெரு, பசும்பொன்,கமுதி 3) ப.த்மஈஸ்வரன், த/பெ.முத்து அரியப்பத்தேவர்,கே. வேப்பங்குளம், கமுதி, ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E. கார்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்,குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்க உத்தரவிட்டார். 

மேற்படி உத்தரவின்பேரில் சாயல்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா எதிரிகள் தினேஷ் குமார், அஜித்குமார்,பத்ம ஈஸ்வரன்,ஆகிய மூன்று எதிரிகளையும் 17.5.20 22 ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஷ்ரா கார்க் உத்தரவுப்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலோ இக்னேஷியஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தாக்கல் ஆகும் வழக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பாலியல் குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்கள் தயக்கமின்றி காவல்துறையில் புகார் அளிக்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Eகார்த்திக்  எச்சரித்துள்ளார்கள் மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 181 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் அனைத்து விதமான குற்றங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஹலோ போலீஸ் தொலைபேசி எண் 8300031100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.கார்த்திக் தெரிவித்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.A.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு