ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்றி அமைக்க முடிவு...!

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்றி அமைக்க முடிவு...!

தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளி வளாகத்தில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே,  சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அரசு பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்