களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்போம் தெருமுனை கூட்டம்

 களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்போம் தெருமுனை கூட்டம்


நெல்லை மாவட்டம், களக்காட்டில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்போம் தெருமுனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் முகமது காஸிர்,களக்காடு ஒன்றிய செயலாளர் இன்பரசு, நகரச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா வரவேற்புரையாற்றினார்.

 லட்சிய ஜனநாய கட்சி நிறுவனத் தலைவர் நெல்லை ஜீவா, புதிய புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் சுதாகரபாண்டியன், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத்தலைவர் K.S.சித்திக், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை  இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட பொதுசெயலாளர் களந்தை மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளர் ஜாண்சன், குறிஞ்சியர் சமூகநீதி பேரவை மண்டல செயலாளர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர் வழக்கறிஞர் அப்துர்ரஹ்மான், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தொண்டரணி செயலாளர் சரத், களக்காடு நகர மகளிரணி செயலாளர் நாகரத்தினம், வள்ளியூர் நகர மகளிரணி செயலாளர் வேலம்மாள், ராதாபுரம் நகர இளைஞரணி செயலாளர் பிரவின் ஆகியோர் கலந்துகொண்டனர்கள் களக்காடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

- Nellai District Reporter : Elaiyaraja