அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி: ஈவிகேஎஸ் இளங்கோவன் ரெகமெண்டேஷன்...!?

அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி: ஈவிகேஎஸ் இளங்கோவன் ரெகமெண்டேஷன்...!

நாகப்பட்டினம் விருந்தினர் மாளிகையில்,  செய்தியாளர்களிடம், ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியதாவது:

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மற்றும் தெலங்கானா கவர்னர் ஆகி விட்டார். அதே போல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராகி விட்டார். அந்த வகையில் அந்தமான் கவர்னர் பதவியை குறிவைத்து  அண்ணாமலை தற்போது காய் நகர்த்தி வருகிறார்.

தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகனுக்கு கிடைத்தது போல் தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என்றும், அதை பெறுவதற்காக அண்ணாமலை துடிக்கிறார். அதனால் தான் அவர், திமுக மீது தினமும் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான். அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள். இவரும் ஒரு சித்தராக இருக்கலாம்.

தமிழக அரசியலை புரட்டி விடலாம் என்று அண்ணாமலை பேசி வருவது இங்கே நடக்காது. குஜராத் மற்றும் உத்தர பிரதேச மக்களை போல் மடத்தனமான மக்கள் தமிழ்நாட்டில் இல்லை. 150 ஆண்டு கால அரசியலை பின்பற்றும் மாநிலம் தமிழகம். இங்குள்ள மக்கள் அனைவரும் விழிப்புணர்வு இருப்பவர்கள். 

அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவி சாய்த்து விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் கவர்னர் பதவியை அவருக்கு கொடுப்பார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பாஜக அகில இந்திய கட்சியல்ல மாவட்ட கட்சி தான். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

இளங்கோவனின் இந்த கருத்துக்கு பாஜகவை சார்ந்த பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
 தமிழக அரசியலில் ஆக்டிவாக இருக்கின்ற ஒரு தலைவர் அண்ணாமலை தான்.  

ஆளும் கட்சியினர் செய்து வருகின்ற ஒவ்வொரு அத்துமீறல்களையும் அராஜகத்தையும் தவறுகளையும், ஊழல்களையும் சுட்டிக் காட்டி தமிழக மக்களை விழிப்படைய செய்து வருகிறார்.  இதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நமக்கு டெபாசிட் கிடைக்காது என்கிற எண்ணத்தில் இப்படி அவர்  பிதற்றி வருகிறார்.

எப்படியாவது அவரை தமிழகத்தை விட்டு வெளியேற்றி விட்டால் தங்கள் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்ற தவறுகளை தட்டிக் கேட்க ஆள்  இருக்க மாட்டார்கள்.  அவர் இங்கிருந்து போய்விட்டால் இஷ்டத்திற்கும் கொள்ளையடிக்கலாம், மக்களை ஏமாற்றி  பிழைக்கலாம் என்கிற எண்ணத்தில் அண்ணாமலைக்கு ஆளுநர் பதவிக்கு ரெகமெண்டேஷன் செய்துள்ளார் இளங்கோவன்.

வருகின்ற தேர்தலில் மாவட்ட கட்சி எது அகில இந்திய அளவிலான மிகப்பெரிய மக்கள் இயக்கம் எது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.  பாஜகவை விமர்சிக்கின்ற தகுதி  இளங்கோவனுக்கு கிடையாது என்றும் கூறியுள்ளனர்.