அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து நெல்லையில் போராட்டம்

 அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து நெல்லையில் போராட்டம்


முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயரைச்சொல்லி இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து "மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்" நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது இதில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மாவட்ட தலைவர் முகமது காஸிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயரைச்சொல்லி இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் தமிழக அரசு மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்" நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது இதில் பொதுச்செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் வக்கீல் பிரபு, தென்மண்டல தலைவர் முத்துக்கருப்பன் , நெல்லை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தர்மராஜ், தச்சைமண்டல தலைவர் தங்கவேல்,மானூர் ஒன்றிய செயலாளர் பள்ளமடை குமார் பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன் மற்றும் முத்துவேல் பாண்டியன், வி.எம் சத்திரம் பால்ராஜ், வீரமாணிக்கபுரம் குணா பாண்டியன், புளியங்குளம் பார்தீபன், புதுகாலனி குமார்,புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மாவட்ட தலைவர் முகமது காஸிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்; இளையராஜா