பில்டர்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா : ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!
சென்னை ப்ளாட் ப்ரமோட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வட சென்னையில் நடைபெற்றது. தலைவராக டி.கிறிஸ்டியன் பால் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், ரூபி பில்டர்ஸ் நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ரூபி ஆர்.மனோகரன், ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம், அகில இந்திய பில்டர்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.
பில்டர்ஸ் அசோசியேஷன்ஸ் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் எல்.சாந்தகுமார், ஸ்ரீதர், ராமபிரபு, ஜெகநாதன், வீரமணி, கார்த்திகேயன், தென் சென்னை அடுக்குமாடி கட்டுநர் சங்கத் தலைவர் வில்சன்ராஜ் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டார்கள்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: இளையராஜா