அரசுப்பள்ளி மாணவனின் லட்சணத்தைப் பாருங்கள்: அலறும் ஆசிரியர்கள்....?!
ஏறுனா ரயிலு குத்துனா ஜெயிலு எடுத்தா பெயிலு என்று பள்ளிக்கூட மாணவன் ஒருவன் ஆசிரியரிடம் திமிராகப் பேசினான், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி தற்போது தமிழகம் முழுக்க வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தேனி மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படித்து வரும் பிளஸ் 1 மாணவனின் ஒழுங்கீனமான செயல்களால் ஆசிரியர்கள் அவனை கண்டித்ததோடு, அவனது பெற்றோர்களுக்கும் சொன்னார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் இரண்டு நாட்களுக்கு முன் கத்தியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியரை மிரட்டினான்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
அதன் பேரில் பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டம் நடந்த பின்னரும் அஞ்சாத அந்த மாணவன் மறு தினமும் கத்தியுடன் வந்தான்.
இதனைக் கண்டித்து தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்படி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்படிப்பட்டமாணவர்களின் பெற்றோர்களே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.