விளைநிலங்கள் கையகப்படுத்துவதை தடுப்பேன் ; அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
விளைநிலங்கள் மீது விவசாயிகள் உயிரே வைத்துள்ளனர், நிலம் கையகப்படுத்துவதை தடுப்பேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கிராம மக்களிடம் உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளி,அளேசீபம்,உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நான்காவது சிப்காட் அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தி வரும்நிலையில்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனஹள்ளி எம்எல்வுமான கே.பி.முனுசாமி அவர்கள் 3 ஊராட்சி மக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார், விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்ததால், நானும் விவசாயி தான் விவசாயி பெற்ற பிள்ளைகளை விட நிலத்தினை அதிகம் நம்பி, உயிரை வைத்துள்ளனர் அப்படிப்பட்ட விளைநிலத்திற்கு பிரச்சனை என்றால் முதலில் போராடக்கூடியவனாக இருப்பேன் என்றார்.
பின்னர் பேட்டியளித்த கே.பி.முனுசாமி:விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதை கைவிட வேண்டும், மேட்டுப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியம் , சூளகிரி ஒன்றிய குழு துணை தலைவர் சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளருமான மாதேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், உத்தனப்பள்ளி கவுன்சிலர் வேலு, கும்மிபள்ளி கவுன்சிலர் முனிராஜ், முன்னாள் கவுன்சிலர் சக்தி நாராயணா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜப்பா, மகாதேவா, மாரப்ப,ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜேபி என்கின்ற ஜெயபிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் , வர்த்தகர் அணி மாவட்ட இணை செயலாளர் சீனிவாசா சாரி, ராமச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜா என்கின்ற ஜெயக்குமார் மல்லையா கலைச்செல்வி ராமன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சார்பு அணி மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்,
ஓசூர் செய்தியாளர்; E.V. பழனியப்பன்