தருமபுரி நகர்மன்றத் தலைவர்: தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் பினாமியா.....?!

தருமபுரி நகர்மன்றத் தலைவர்: தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் பினாமியா.....?!

தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளுக்கானநகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தருமபுரி நகராட்சியில்திமுக 19,இதன் கூட்டணி கட்சியான விசிக 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும், அதிமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.


வெற்றி பெற்ற 33 வார்டு உறுப்பினர்களுக்கு  நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சித்ராசுகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரி நகராட்சியை திமுக 3 வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதில்திமுக சர்பில் 5 பெண் வார்டு கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதில் திமுக நகர செயலாளர் அன்பழகன் மனைவி நித்தியாவிற்கு நகர்மன்ற பதவி வழங்கபட அதிக வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில்  நகர்மன்ற தலைவர் பதவிக்கு 27 வது வார்டில் போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் லட்சுமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் தருமபுரி நகர் பகுதியில் உள்ள திமுகவினர் அதிர்சியடைந்துள்ளனர்.

நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுத்த உள்ள லட்சுமியின் கணவர் நாட்டான் மாதுநீண்டகாலமாக திமுகவில் உள்ளார். அவர் தற்போது மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினராக உள்ளார். 

நகர்மன்ற தலைவராக லட்சுமி தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தருமபுரியில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ஒருவர் தான் இதற்கு  என கூறப்படுகிறது.

கல்வி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்துநிலையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் இடம் வழங்கினார். பேருந்து நிலையத்தில் தொழிலதிபர் பெரிய கடைகள் மற்றும் மால் அமைக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அப்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால், புதிய பேருந்து நிலையம் அமைப்பது நிறுத்தி வைக்கப் பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தொழிலதிபரின் பினமாகியாக இருக்கும் நாட்டான் மாதுவின் மனைவியை நகர் மன்ற தலைவராக்கி மீண்டும் பேருந்து நிலையம் கொண்டுவருவதற்கு பல கோடிகள் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு கொடுத்து லட்சுமிக்கு நகர் மன்ற தலைவர் பதவி சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மீது திமுகவினர் அதிருப்பதியில் உள்ளனர்.

இதனால்தருமபுரி நகர்பகுதியில் திமுகவிற்குள் உட்காட்சி பூசல்வெடிக்கும் என கூறப்படுகிறது.