நினைவில் வாழும் முதன்மை வன அலுவலர் மணிகண்டன்

நினைவில் வாழும் முதன்மை வன அலுவலர் மணிகண்டன்

ராமநாதபுரம் மார்ச்-03

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் லெட்சுமி மருத்துவமனை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, நினைவில் வாழும் முதன்மை வன அலுவலர் மணிகண்டன் நினைவாக 4 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் தன்னார்வ ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் முப்பெரும் நிகழ்ச்சி ராமநாதபுரம் கேணிக்கரை லெட்சுமி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அல்லி  துவக்கி வைத்தார்கள்.   இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம்  மருத்துவமனை மருத்துவகல்லூரி நரம்பியல் துறை பேராசிரியர் மருத்துவர்.மலையரசுஇதய அறுவை சிகிச்சை நிபுணர். மருத்துவர்  ஜவஹர்லால், மீனாட்சி மிஷன் கண் மருத்துவமனை மருத்துவர். சுரேஷ்குமார், பொது மருத்துவர்  அக்ஸயா, முகாம் மேலாளர் ஜாலி உதயகுமார் மற்றும் லெட்சுமி மருத்துவமனை ஊழியர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள், மீனாட்சி மிஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சுமார் 200 பேர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர் முன்னதாக ரத்த தானம் செய்தார்கள் இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறை பேராசிரியர். மருத்துவர், மலையரசு, ரத்ததானம் செய்தார்.

பி.ஜே.பி.மாநில இளைஞரணி நிர்வாகி ஆத்மா கார்த்திக், ராமநாதபுரம் நகர தலைவர் வீரபாகு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் 75க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தார்கள்.

இதற்கான ஏற்பாட்டினை அரசு தலைமை மருத்துவமனை எலும்பு (ஆர்த்தோ) மருத்துவர் S.மனோஜ்குமார் மற்றும் நிறைமதி மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு