திருஉத்தரகோசமங்கையில் மஹாசிவராத்திரி பெருவிழா!!!!

திருஉத்தரகோசமங்கையில் மஹாசிவராத்திரி பெருவிழா!

ராமநாதபுரம் மார்ச் - 02

திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 4வது ஆண்டாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீரங்கம் பரதகலா அகாடமி இணைந்து               திரு உத்தரகோசமங்கை திருக்கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில்  நாட்டியாஞ்சலி-2022 என்ற கலை நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியை ராமநாதபுரம் சமஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதிராணி இராஜேஸ்வரி நாச்சியார் B.A., ராமேஸ்வரம் கோயில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, ராணி லக்குமி நாச்சியார், மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன், திவான் V.K. பழனிவேல்பாண்டியன், தமிழக அரசு முன்னாள் கலையியல் அறிவுரைஞர், பரதகலா அகாடமி நிறுவனர் நாட்டியமாமணி அ.பூரணபுஷ்கலா, ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மும்பை என பல்வேறு மாநிலங்களிலிருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், கதக்களி, குச்சிப்புடி உள்ளிட்ட 12 வகையான பாரம்பரிய நடன நிகழ்ச்சி மாலை 6 மணி முதல்,மறுநாள் காலை 6மணி வரை நடைபெற்றது. முன்னதாக கைலாய வாத்ய குழுவினரின் மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது. இதில் இந்து தமிழர்கட்சி நிறுவனர் R. இரவிக்குமார்,

திருச்சி மாவட்ட சிலம்பாட்டக்கழக துணைத்தலைவர் G.சிவக்குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை தந்த முக்கியஸ்த்தர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.  

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்