ஆர்.டி..இ. 25% மாணவர்களிடம் கல்விக்கட்டணம் தவிர இன்ன பிற கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு உரிமை உண்டு

 ஆர்.டி..இ. 25% மாணவர்களிடம்  கல்விக்கட்டணம் தவிர இன்ன பிற  கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு உரிமை உண்டு

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் தகவல்..

 தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் மற்றும் மேல் முறையீட்டு அலுவலர் செயல்முறைகள் சென்னை-6

 ந.க.எண்.4331/இ /RTI/2017. நாள்.08.09.2017.

பொருள்.. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தகவல் கோரிய மனு சார்பாக..

 பார்வை திரு. ராதாகிருஷ்ணன் என்பவரின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் மேல் முறையீட்டு மனு..

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் பார்வையில் கண்ட மேல்முறையீட்டு மனு இவ்அலுவலகத்தில் கிடைக்கப்பெற்றது.

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 %சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 பகுதி lV விதி எண் 9(1) இன்படி கல்வி கட்டணம் மட்டுமே பள்ளிக்கு அரசால் ஈடு செய்யப்படும்.

 பெற்றோர்கள்இதர கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும்.

 கையொப்பம்.. திருமதி. ஸ்ரீதேவி. மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் இயக்குனர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம். சென்னை 6.

 இதுதான் உண்மை இத்தனை நாட்கள் நம்மை ஏமாற்றி வந்த அரசு அதிகாரிகள் பெற்றோர்கள்

ஆர் டி இ என்றால் எல்லாம் இலவசம் என்று எண்ணிக்கொண்டு இருந்ததை மாற்றி கல்வி கட்டணம் தவிர இன்னபிற

கோ கரிகுலர் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் யூனிஃபார்ம் ஷூ சாக்ஸ் பெல்ட்  டை புத்தகம்

நோட்டுபுத்தகம் பள்ளி வாகன கட்டணம் போன்ற  கட்டணங்களை வசூலித்துக் கொள்ளலாம்.

 எனவே யாரும் எதற்கும் பயப்பட வேண்டாம்.

தைரியமாக தனித்தனியாக பெற்றோரை அழைத்து பேசி பிரச்சனை இல்லாமல் மேற்கண்ட ஆணையை காட்டி பள்ளி கட்டணம் வாங்க முயற்சிக்கவும்.

 அன்புடன் உங்கள் கே.ஆர்.நந்தகுமார் மாநில செயலாளர்.