ராமநாதபுரத்தில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா!
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் அனைத்து சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 181 வது, 182 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நிகழ்ச்சி ஏபிசி மைதீன் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக மாநிலச் செயலாளர் S.சலீமுல்லா கான், தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் M.சாதிக்பாட்சா, வரவேற்புரை ஆற்றினார். இதில் பாபநாசம் M.L.A.வும், தமுமுக மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி,ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் பவர் பவுன்டேஷன்,பவர் குரூப் ஆப் கம்பெனி தலைவர் Dr.Y.T.முகம்மது ஜாஹீர் உசேன்,181 வது ஆம்புலன்ஸை அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்தார். முடிவில் கொரோனா நேரத்தில் பணி செய்த தமுமுக மமக (கிழக்கு) மாவட்ட தலைவர் M.பட்டாணி மீரான் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் A.ஜெரினா பானு