குழப்பம்...குழப்பம்.. பள்ளி கல்வித்துறையில் தொடரும் குழப்பம்...!

 குழப்பம்...குழப்பம்.. பள்ளி கல்வித்துறையில் தொடரும் குழப்பம்...!

*கல்வித்துறையில் தினந்தோறும் ஒரு அறிவிப்பு என்பது நீடித்து...தற்போது ஒரே நாளில் பல அறிவிப்புகள் என கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது..*

*காலை ஒரு செய்தி.. மாலை ஒரு செய்தி...*

*ஆசிரியர் கலந்தாய்வு தேதி தொடர்ந்து நான்காவது முறையாக மாற்றம்...*

*மாலையில் கலந்தாய்வு தேதி மாற்ற அறிவிப்பு- தொடக்கக்கல்வி இயக்குநர்.*

*இரவில் கலந்தாய்வு ஒத்திவைப்பு- பள்ளிகல்வித்துறை ஆணையர்.*

*பயிற்சி உண்டு...அடுத்தது இல்லை அறிவிப்பு...

*சனிக்கிழமை பள்ளி உண்டா...

இல்லையா குழப்பம்...*

*ஆசிரியர்களுக்கு அ..ஆ.. தெரியுமா..1,2,...

தெரியுமா என தேர்வு குழப்பம்...*

*இல்லம் தேடி கல்வியில் மாணவர் சேர்க்கை குழப்பம்...*

*EMIS ல் அப்டேட் குழப்பம்...*

*PFM ல் பள்ளி மான்யம் எடுப்பதில் குழப்பம்...*

*EMIS ல் வருகை பதிவு போடுவதில் குழப்பம்...*

 அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனும் அரசாணையை அமுல் படுத்த கோரி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தொடுத்த வழக்கில்  தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டுமென்ற  அரசாணையை அமல்படுத்த கோரி உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் தீர்ப்புக்குப் பின்

1977 ளில் போட்ட உத்தரவை ரத்து செய்து நீதிமன்றத் தீர்ப்பை அவமானப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை..

 அரசு துவக்க  பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக

தரம் உயர்த்துவது போல் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கில் தந்த தீர்ப்பை ஏற்று அமல்படுத்தாமல் ரத்து செய்து குழப்படி செய்துவரும் பள்ளிக்கல்வித்துறை

RTE கல்வி கட்டண பாக்கியை ஆண்டுதோறும் தராமல் இழுத்தடித்து ஒவ்வொருமுறையும் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடுத்து தான் கல்விக்கட்டணம் கொடுக்கும் அவலநிலை...

 சென்றாண்டு அந்த கட்டணத்திலும் 25% தராமல் அரசு போட்ட உத்தரவை மாற்றிப் போட்டு தனியார் பள்ளிகளை ஏமாற்றிய பள்ளிக்கல்வித்துறை.

 தனியார் பள்ளிகளுக்கு

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தரவேண்டிய அங்கீகாரத்தை ஓராண்டு மட்டும் தந்து கல்லா கட்ட நினைக்கும் பள்ளிக்கல்வித்துறை.

 தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை விற்கும் தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர்கள் புத்தகம் வினியோகிக்கும் போது அடிக்கும் கமிஷனை தடுத்து நிறுத்த முடியாத

பள்ளிக்கல்வித்துறை

 தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் டி. சி வாங்காமல் EMIS No ஐ திருடி 6.50 லட்சம் மாணவர்களை சேர்த்திட்ட பள்ளி கல்வித்துறை....

 பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் யாவும் ஒரே மாதிரியான கல்வி கட்டணம் வசூலிக்கிற போது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒவ்வொரு

பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான மிகக்குறைந்த  கல்வி கட்டணத்தை பாரபட்சத்தோடு நிர்ணயிக்கும் பள்ளி  கல்வித்துறை..

 தேர்வுகள் நடத்துவதில் குழப்பம் மதிப்பெண்கள் போடுவதில் குழப்பம் அரசுப் பள்ளிகளை மட்டும் முன்னிறுத்துவது தனியார் பள்ளிகளை பின் தள்ளி

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு தடவும் வேலையை செய்து வரும் பள்ளிக்கல்வித்துறை

 எல்லா தேர்வு முடிவுகளையும் தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தது என்று தனித்தனியே வெளியிட மறுக்கும்  பள்ளிக் கல்வித்துறை

 தனியார் பள்ளி கட்டிடங்களை மட்டும் ஆய்வு செய்யும் பள்ளிக்கல்வித்துறைஅரசுப்பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய மறுப்பது ஏன் ...?

 2000 அரசு பள்ளி கட்டிடங்களை

இடிப்பதாகச் சொன்னீர்களே

 இடித்தீர்களா? அதற்கு மாற்று கட்டிடம் கட்டி விட்டீர்களா?

அங்கே படிக்கும் மாணவர்கனின்

 நிலை என்ன? பொதுமக்களுக்கு வெள்ளை அறிக்கையாக பள்ளி கல்வித்துறை தருமா?

தனியார் பள்ளிகள் மட்டும் அனைத்து சான்றுகளோடு ஆண்டு தோறும்  அங்கீகாரம் பெற வேண்டும்.

அரசு பள்ளிக்கு மட்டும்

எந்த சான்றும் எந்த அங்கீகாரமும் கிடையாது

பாரபட்சம் காட்டும் பள்ளிக்கல்வித்துறை

 புதிதாக சேர்ந்த  6.50 லட்சம் மாணவர்களுக்கு கட்டிடம் ஏதேனும் கட்டினீர்களா?

 ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லையே அந்த மாணவர்களின் கதி என்ன ?

 ஆன்-லைன் வழியில் அங்கீகாரம் தர அரசாணை போட்டு ஏன் நிலுவையில் வைத்திருக்கிறீர்கள் வசூலுக்காகவா?

 தனியார் பள்ளிகளுக்கான தனி இயக்குனரகம் தொடங்குவதாக அரசாணை வெளியிட்டு ஏன்  இன்னும்

அமுல்படுத்தவில்லை?

.பட்டியலிட முடியலடா சாமி...*

*மொத்தத்தில் கல்வித்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது...என்பதே குழப்பம் தான்...*

*மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக கல்வித்துறையில் தலையிட வேண்டும் என்பதே பல்வேறு பள்ளி நிர்வாகிகள்  ஆசிரியர்களின் வேண்டுகோள் ஆகும்...*

கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம்.