ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் பிப்-11

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு வரக்கூடாது எனும் காரணத்தைச் சொல்லி இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிக்கும் பாசிச பயங்கரவாத கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் J.M.ஆரிப் கான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் அன்சாரி கண்டன உரையாற்றினார். இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கர்நாடக பாசிச அரசைக் கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு