4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு

 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்- மத்திய அரசு

நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்ற அளவுகளில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஹெல்மெட்டுகளை தயாரிக்கும்படி தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை 40 கிமீ வேகத்திற்கு மேல் இயக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும்  என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு சாதனம் மற்றும் ஹெல்மெட் பயன்படுத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முன்பு முன்மொழிந்தது. இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மக்களின் கருத்தை கேட்க ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.