மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

ராமநாதபுரம் ஜன-25

மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர்  ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டம் , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவை ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர்  சுப்புலட்சுமி ஜீவானந்தம் அவர்கள் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு.தௌபீக் அலி அவர்கள் மற்றும்  கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வழிநெடுகிலும் திமுக கொடிகள் நட்டு, பட்டாசுகள் வெடித்தும், மலர்மாலைகள் அணிவித்தும், சால்வை அணிவித்தும் திமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி' ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு