வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழா
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் 73 ஆம் ஆண்டு குடியரசு தின விழா பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் ராம.வீரமணி கொடியேற்றினார். தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில செயலாளர் ஜெகமுருகன் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஜோதி பவுண்டேஷன் சார்பில் நொட்டு, புத்தகம், பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன், தலைவர் சேகர், செயலாளர் மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் பக்கிரிசாமி, .R Pசெந்தில், ஐயப்பன் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.