ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 73 ஆவது குடியரசு தினவிழா
ராமநாதபுரம் ஜன- 26
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 73 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, இன்று 26-1-22 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் நற்சான்றிதழ் 139 பேருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் காவல் ஆளினர்கள் 59 பேர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 27 பேர்களுக்கு சான்றிதழ்களும், ஊரக வளர்ச்சி திட்ட முகாமை சேர்ந்த சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு 27 பேர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் சமாதானப் புறாக்களை பறக்க விட்டார்கள். இதன்பின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத்
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு