நமது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி....! போராட்டத்தை தடுப்பதற்காகவே அவசரமாக வரவு வைக்கப்பட்ட RTE தொகை!!

 நமது போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி....! போராட்டத்தை தவிர்ப்பதற்காகவே அவசரமாக வரவு வைக்கப்பட்ட RTE தொகை!!


ஆர். டி. இ.கல்வி கட்டண பாக்கியை வழங்கக்கோரி நமது சங்கத்தின் சார்பில் 

 சென்னையில் பள்ளிக்கல்வி ஆணையாளர் அலுவலகம் எஸ். எஸ்.ஏ எஸ்.பி. டி.

 முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆணையாளர் எஸ்பிடி

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் தொடக்கக்கல்வி இயக்குனர்  உள்ளிட்ட  அனைவரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தோம்.

இந்த மாதம் 6-ம் தேதிக்குள் உரிய கல்வி கட்டண பாக்கியை தனியார் பள்ளிகளுக்கு தரவில்லை என்றால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து காவல்துறை ஆணையாளரை சந்தித்து அனுமதியும் பாதுகாப்பும்கேட்டோம்.

தமிழ்நாடு முழுக்க சங்க நிர்வாகிகள் சுவரொட்டிகள் பேனர்கள் வைத்து  ஆர்ப்பரிக்க தொடங்கினார்கள்...

அதைத்தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை விழித்துக்கொண்டு அரசுக்கு  கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக விரைந்து செயல்பட துவங்கினார்கள்.

 ஒருபுறம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மறுபுறம் மக்கள் மன்றத்தில்

போராடவும் வந்துவிட்டோம்.

கூட்டமைப்புகள் வரும் என்று காத்திருந்தோம். யாரும் ஆதரிக்கவில்லை...

ஒரு மகிழ்ச்சி என்ன என்றால் கடந்த காலத்தைப் போல் எதிர்க்கவில்லை.

 மற்ற மாநிலங்கள் எல்லாம் 100% கல்வி கட்டணத்தை தந்த பின்னால். மத்திய அரசு கொடுத்த நிதி தராமல் இழுத்தடித்து காலம் தாழ்த்தி பள்ளி நிர்வாகிகளுக்கு

மன உலைச்சலை ஏற்படுத்தி  வர வேண்டிய கல்விக் கட்டண பாக்கியை 75 சதவீதமாக குறைத்து கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய சதிச்செயல் என்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை...

 அரசு ஊழியர்கள் 75% தான் சம்பளம் தந்தார்களா?

 எனவே தற்போது பள்ளி நிர்வாகிகளுக்கு உள்ள பொருளாதார சுமைகளை போக்கும் வகையில் கொடுக்கற 75 சதவீதத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் 25% கேட்டு வழக்கு தொடுப்பது என்று முடிவெடுத்திருக்

கிறோம்.

 நாம் கேட்ட தொகையும் கொடுக்கவில்லை அரசு நிர்ணயித்த தொகையை கொடுக்கவில்லை எதுவும் இல்லாமல் தன்னிச்சையாக தாங்களே முடிவு செய்து கொண்டு கொடுத்துள்ள கல்விக் கட்டணத்தின் குளறுபடிகளை போக்குவோம்...

 இப்படியே போனால் ஆர் டி இ 25 சதவீத மாணவர் சேர்க்கையை வரும் ஆண்டு நாம் அனைவரும் இணைந்து செய்யமாட்டோம் என்று அறிவிக்கலாம் என்பதை பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தால் அரசுக்கு எச்சரிக்கையாகவே சொல்லி விடுவதற்கு நமது சங்கம் தயாராக உள்ளது..

 பாம்பை பார்த்து பயப்படலாம்...

 பாம்பு என்று சொன்னாலே பயப்படுபவர்கள் எல்லாம் சங்கம் வைத்துக்கொண்டு போராட்ட அறிவிப்புக்கு ஆதரவு தராமல் ஒதுங்கி போவது பள்ளி நிர்வாகிகளை அடகு வைப்பதற்கு சமம் ஆகும்...

இனிவரும் காலமாவது நல்லதொரு முடிவை அனைத்து சங்கங்களும் எடுக்க வேண்டும்...

 எங்கள் சங்கத்தை பொருத்தவரை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல்  நிமிர்ந்து நின்று நேருக்கு நேர் பேசி ஒரு முடிவு எடுத்தால் எந்த ஈகோவும் இல்லாமல் அனைவருடன் இணைந்து செயல்பட என்றும் தயாராக இருக்கிறோம்....

 இனிமேலாவது பள்ளி நிர்வாகிகள் நன்றியோடு இருக்க வேண்டும்...

நமது மாநில சங்கத்தோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்....

 மனசாட்சியுள்ள நல்ல பள்ளி நிர்வாகிகள்

 கடந்த ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத்தை பெற்றுத் தந்தோம்.

 இந்த ஆண்டும் உரிய கல்வி கட்டணத்தை பெற்றுத் தந்திருக்கிறோம்.

 இனி வர வேண்டியதையும் நிச்சயம் பெற்றுத்தருவோம்.....

 இந்த நிலையிலாவது சங்கத்தின் ஆண்டு சந்தாவை கட்ட வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறோம்...

 இதையும் நீங்கள் கட்டமறுத்தால் ஏமாற்ற நினைத்தால் ஒதுங்கி போக நினைத்தால் உங்களை உங்கள் பெற்றோர்கள் நிச்சயம் ஏமாற்றுவார்கள் என்பதை மனதில் நிறுத்தி நர்சரி பிரைமரி பள்ளிகள் 2000,மெட்ரிக் பள்ளிகள் நான்காயிரம்,

 மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் 6 ஆயிரம் மட்டும் செலுத்தி உங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளுங்கள்....

 என்றும் தனியார் பள்ளிகள் நலம் நாடும் உங்கள்

 கே ஆர்.நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.