உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம்


டிச-19

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா சேதுபதி ராணி திருமதி.ராஜேஸ்வரி நாச்சியார் அவர்களுக்கு பாத்தியமானதும் அவர்களின் நிர்வாகத்திற்குள்ளாதுமான திரு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலஸ்தானம் அருள்மிகு வரதராஜ பெருமானுக்குசந்தனம்படி களைதல் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.காலை 9 மணிக்கு மூலவர் அருள்மிகு மரகத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது .இதில் பக்த கோடிகளும் பொதுமக்களும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்த பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த ஆருத்ரா தரிசன திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்களின் உத்தரவுப்படி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அருள்மிகு மரகத நடராஜப்பெருமானுக்குசந்தன படி களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். கோவிலின் முன்பாக திரு.உத்தரகோசமங்கை கோயிலின் வாசலில்உள்ளேயும் வெளியேயும் திருஉத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார அலுவலர் ராசிக்தீன், டாக்டர் கிஷோர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிறப்பு சுகாதார மையத்திற்குவருகை தந்த பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்.

 விஜயகுமார் இதற்கான ஏற்பாட்டினை மிக சிறப்பாக செய்திருந்தார். இந்த முகாமில் கொரோனா ஊசியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதில்,ஈ.சி.ஜி,மாத்திரை மருந்துகளும் நோயாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N-A. ஜெரினா பானு