இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை

 இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை


ராமநாதபுரம் டிச-10 

 நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி. முஹம்மது பஷீர், தேசிய துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.பி. அப்துஸ் ஸமது சமதானி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி ஆகியோர் டெல்லியில் 10.12.2021 வெள்ளிக்கிழமை இறுதி மரியாதை செலுத்தினர். சேலம் மாவட்ட துணைச் செயலாளர்ஒய். லியாகத் அலிகான் உடனிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு