உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் 19ஆம் தேதி நடக்கிறது!

 உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் 19ஆம் தேதி நடக்கிறது!

ராமநாதபுரம் டிச-16

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை  அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். மேலும் இங்கு எழுந்தருளியுள்ள ஆடும் திருக்கோலத்தில் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம், பாதுகாப்பு ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும் வருடத்தில் ஒரு நாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்படும் இதன்படி வருகிற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தன காப்பு, கலையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மஹா அபிஷேகம் தொடங்கி மறுநாள் அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜருக்கு சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கொரானா பரவலை தடுக்கும் வகையில்  மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு